27 July 2011

ஏகத்துவமும்! சோதனைகளும்!

ஸஃது (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  நான் நபி (ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ”நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான்.  ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள். நூல்: திர்மிதி 2322
 

 இன்று குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என உறுதிகொண்டு அதனைப் பிரச்சாரம் செய்கின்ற ஒவ்வொருவரும் மேற்கண்ட ஹதீஸை மனதில் நிறுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இன்று தான் ஏகத்துவவாதிகளுக்கு மத்தியில் எவ்வளவு திருப்பங்கள் மாற்றங்கள் கருத்துருவாக்கங்கள்.

ஒரு நேரத்தில் தர்ஹா வழிபாட்டை எதிர்த்து, மத்ஹபு பிரிவுகளை எதிர்த்து, சடங்கு சம்பிரதாயங்களை, பித்அத்தான அனாச்சாரங்களை எதிர்த்தவர்கள், வரதட்சணை திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என சூளுரைத்தவர்கள், ஊரை எதிர்த்து  சமுதாயத்தை எதிர்த்து  குடும்பத் தினரை எதிர்த்து, ஏன்? பெற்றெடுத்த தாய் தந்தையர்களைக் கூட எதிர்த்து எங்களுடைய தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும் தான் நாங்கள் பின்பற்றுவோம். மார்க்க விஷயங்களில் எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டோம் என மார் தட்டியவர்கள், இது போன்று எதிர்த்துக் கூற வ­மையில்லா விட்டாலும் நீங்கள் செய்வது சரிதான். இதுதான் சரியான வழிமுறை என்று ஆதரவாகப் பேசியவர்கள் இவர்களுக்கு மத்தியில்தான் எவ்வளவு திருப்பங்கள்.
 
இக்கட்டுரையை எழுதுகின்ற நான் இந்த உண்மையான ஏகத்துவக் கொள்கையை விளங்கி ஆறு அல்லது ஏழு வருடங்கள் தான் ஆகின்றது. ஆனால் எனக்கு ஏகத்துவத்தைப் போதித்தவர்கள்  தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் ஆணி வேராகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் மூலம் நான் ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்னால் தமிழக முஸ்­லிம்களின் மார்க்கத்தின் நிலைகளைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். இஸ்லாமிய சமுதாயம் ஓரிறைக் கொள்கைளை விளங்காமல் இணைவைக்கும் காரியங்களில் தான் மூழ்கிக் கிடந்தார்கள். இவைகள் தான் நம்மை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக் கூடியவை என்று ஒரு ஆழமான நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. எங்கு நோக்கினும் கோயில் வழிபாடுகளைப் போல் மக்கள் தர்ஹாக்களிலும் கந்தூரி உரூஸ் திருவிழாக்களிலும் தான் மூழ்கிக் கிடந்தனர். தாயத்து தகடுகள் தான் அவர்களின் வீடுகளிலும் கடைகளிலும் அவர்களின் உடல்களிலும் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.
 
ஃபாத்திஹாக்கள், மவ்லூதுகள், நூறு மஸாலாக்கள் தான் அவர்களுக்கு இறைவேதம் போல் காட்டப்பட்து. திருமறைக்குர்ஆனை மக்களுக்குக் கற்பிக்க வேண்டிய ஆ­ம் பெருமக்களே அதனைத் தமிழில் வெளியிடுவதற்குப் பெரும் தடைக் கற்களாக இருந்தார்கள். அனைத்து அனாச்சாரங்களிலும் முன்னின்று வழி நடத்தியவர்கள் இந்த ஆ­ம் பெரு மக்கள் தான். மக்கத்து காஃபிர்களின் இணைவைப்புக் கொள்கைகளை விட மிக மோசமான கொள்கையில் தான் அன்று நம்முடைய சமுதாயம் மூழ்கிக் கிடந்தது. மக்கத்து காஃபிர்களாவது துன்பம் வரும்போது அல்லாஹ்வை மட்டும் அழைப்பார்கள் என திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் இவர்களோ துன்ப நேரத்திலும் கூட ‘முஹையித்தீனே’ என்னை காப்பாற்றுங்கள்” என்று அழைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
 
மார்க்கத்தைப் போதிக்க வேண்டிய மதரஸாக்கள் மத்ஹபு வெறியை வளர்க்கக் கூடிய கூடங்களாகவும். அங்கு பயின்று வெளிவரும் மாணவர்கள் புரோகிதர்களாகவும் மாறிக் கொண்டிருந்தனர். வரதட்சணைக் கொடுமை தலை விரித்தாடியது. வட்டியை பாவம் என்று அறியாமலேயே சமுதாயம் அதில் மூழ்கிக் கிடந்தது.
 
மார்க்க விஷயத்தில் மட்டும் அவர்கள் பேரிழப்பில் இருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் அவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தங்களுக்கெதிராக உலக அளவில் பின்னப்படுகின்ற சதிவலைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவ சமுதாயத்தவர்கள், மதவெறியர்கள், நாத்திகவாதிகள், காதியானிகள் இஸ்லாத்தை சரியாக விளங்காமல் செய்கின்ற அவதூறுப் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்க இவர்களுக்குத் தெம்பில்லை. இஸ்லாமிய சமுதாயத்தவர்கள் சினிமா நடிகர்களை தங்களுடைய வாழ்க்கைக்கு முன் மாதிரியாக்கி அவர்களுக்குப் பின்னால் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். சமுதாயத்தில் காணப்பட்ட மூடநம்பிக்கைகளையும் அனாச்சாரங்களையும் கண்ட சிலர் இஸ்லாத்தையே வெறுத்து கம்யூனிஸ்டுகளாகவும் நாத்திகவாதிகளாகவும் மாறினர்கள். சின்னஞ் சிறிய சமுதாயங்கள் கூட தங்களுடைய உரிமைகளுக்குப் போராடி இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டிருந்த  வேளையில் இவர்களுக்கென்று குரல் கொடுப்பதற்கு யாருமில்லை. போராட்ட வழிமுறைகளை அறியாமல் சமுதாயம் தடுமாறிக் கொண்டிருந்தது.
 
மக்களை மார்க்க ரீதியாக சீர்திருத்தம் செய்யக்கூடிய எந்த இயக்கங்களும் அப்பொழுது தமிழகத்தில் இல்லை என நான் கூற வரவில்லை. இவற்றையெல்லாம் தவறு என விளங்கியவர்கள் அன்றைக்கும் இருக்கத்தான் செய்தனர். மக்கள் அந்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த நம்பிக்கையையும், ஆழ்ந்த பற்றையும் பார்த்தவர்கள் இதனை எதிர்த்துக் கூறினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைக் கவனித்துத் தங்களோடு அதனை நிறுத்திக் கொண்டனர். இவற்றை எதிர்த்தால் தங்கள் இயக்கத்திற்குக் கூட்டம் சேராது என்ற கவலையும் அவர்களுக்கு இருந்தது.
 
இப்படிப் பட்ட காலகட்டத்தில் தான் பின் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல் உள்ளதை உள்ளபடி தெளிவாகக் கூறி உண்மையான இஸ்லாத்தைப் போதிக்கக் கூடிய அழைப்பாளர்கள் இறைவனின் அருளால் உருவானார்கள். தமிழகத்தில் முஸ்­ம்களுக்கு மத்தியில் யாருடைய வார்த்தைகளுக்கும் இல்லாத தாக்கங்களும் எதிர்ப்புகளும் இவர்களுடைய வார்த்தைகளுக்கு இருந்தது.  ஒவ்வொரு ஊரிலும் சத்தியப் பிரச்சாரம் ஒ­த்தது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஏகத்துவத்தைப் போதிக்கக் கூடியவர்களின் கேஸட்டுகளும் கட்டுரைகளும் அலசப்பட்டுக் கொண்டிருந்தன. உண்மையான தவ்ஹீதை விளங்கி அதைப் பின்பற்றிய சகோதரர்கள் சமுதாய ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளானார்கள். ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள், அவர்கள் பள்ளிவாசல்களுக்குள் வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.
 
இவர்கள் தொழுகையில் விரலை அசைக்கிறார்கள், நெஞ்சில் தக்பீர் கட்டுகிறார்கள், குழப்பம் செய்கிறார்கள் என அவர்கள் வெளிப்படையாகக் கூறிக் கொண்டாலும் அவர்கள் தடை செய்ததன் உண்மையான காரணம் அவர்களின் கொள்கைப் பிரச்சனை தான். காலம் காலமாக நாமும் நம்முடைய மூதாதையர்களும் செய்து வந்தவற்றை இவர்கள் கூடாது என்கிறார்களே இவற்றைச் செய்தால் நரகம் என்கிறார்களே என்ற கொள்கை வெறி தான் அவர்களைத் தூண்டிவிட்டது.
 
மார்க்கத்தின் பெயரால்  மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த  ஆ­ம் பெருமக்களும் இவர்களால் எங்கே நம்முடைய பிழைப்பிற்கு ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து ”ஜமாத்துல் உலமா”வின் மூலம் கடுமையான எதிர்ப்புகளும் நம்மைப் பற்றி அவதூறுப் பிரச்சாரங்களையும் கடுமையாகத் தூண்டிவிட்டனர். சமுதாயத் துரோகிகள், யூதக் கைக்கூ­கள், பிரிவினை வாதிகள் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டனர்.
 
"எரிகிற தீயில் பிடுங்கிய வரை லாபம்" என்று கூறுவது போல் இந்த எதிர்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய இயக்கத்திற்கு ஆள் பிடிப்பதற்காக முஸ்­ம் லீக், ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாத் போன்ற இயக்கத்தினரும் இவர்களை கடுமையாக எதிர்த்தார்கள்.
 
எதிர்ப்புகள் கடுமையாக இருந்தாலும் இந்த தவ்ஹீது பிரச்சாரம் மேலோங்கிய பிறகு இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறிய கிறிஸ்தவர்களுக்கும், மத வெறியர்களுக்கும், பிற மத சகோதரர்களுக்கும், நாத்திகவாதிகளுக்கும், காதியானிகளுக்கும் ஆதாரப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பதிலளிக்கப்பட்டது. இஸ்லாத்தைத் தவறாக விளங்கியவர்களெல்லாம் அதனுடைய தனிச் சிறப்பை விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகளோடு விவாதம் செய்யப்பட்டு உண்மையான மார்க்கம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இஸ்லாம் என்பது குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான். மத்ஹபு பிரிவினைகளுக்கும், தரீக்கா பிரிவினைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என எடுத்துரைக்கப்பட்டது.
 
இந்த ஏகத்துவப் பிரச்சாரகர்களின் பிரச்சாரத்தின் மூலம் அனைத்து அனாச்சாரங்களையும் இல்லாமல் ஆக்க முடியவில்லை என்றாலும் நாளுக்கு நாள் அதி­ருந்து விடுபடக்கூடிய சகோதரர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுக்குரிய எதிர்ப்புகளும் பலவிதங்களில் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.
 
மார்க்க விஷயத்தில் மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் விழிப்புணர்வு ஏற்பட்டது. மார்க்க ரீதியாக இவர்களை எதிர்ப்பவர்கள் கூட இவர்களுடைய பொது நலச் சேவைகளையும், சமுதாயப் பிரச்சினைகளில் இவர்கள் காட்டுகின்ற தீவிரத்தையும் கவனித்து இவர்களுக்குப் பின்னால் அணி வகுக்கத் துவங்கினர். முஸ்­ம்களுக்கு எதிராக பின்னப்படும் சதி வலைகள் அனைத்தும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. ஜனநாயக ரீதியாகப் போராடும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டனர். தங்களுடைய பிரச்சனைகளையும் பாதிப்புகளையும் மேல் மட்டம் வரை கொண்டு செல்லும் திறனைப் பெற்றனர்.
 
மார்க்க ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும். பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வரும் இவர்களுக்கு மத்தியில் இப்பொழுது புதுவிதமான ஒரு சோதனையும் ஏற்பட்டிருக்கிறது.  அது ஒரு சில தவ்ஹீத்வாதிகள், சத்தியப் பிரச்சாரத்தையே சதிவேலை எனக் கூறும் அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது.
 
இவர்களுடைய சத்தியப் பிரச்சாரத்தின் மூலம் கவரப்பட்ட இளைஞர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதைப் பார்த்த சில போ­கள் அவர்களைத் திசை திருப்புவதற்காக இவர்களைப் போன்று தங்களையும் காட்டிக் கொண்டு இவர்களோடு கலந்தனர். தங்களுக்கென்று செல்வாக்கையும் தேடிக் கொண்டனர். இன்றைக்கு இவர்கள் தங்களுடைய சுயரூபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
 
நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று கூறுகின்ற இவர்கள் தர்ஹா வழிபாட்டுக்காரர்களை எதிர்த்தால் நியாயம் என்று கூறலாம். மத்ஹபு பிரிவினைகளையோ, பித்அத்தான அனாச்சாரங்களையோ, வரதட்சணை திருமணங்களையோ இவர்கள் எதிர்க்கவில்லை.
 
மாறாக தர்ஹா வழிபாடுகளையும், மத்ஹபு பிரிவினைகளையும், வரதட்சனைக் கொடுமைகளையும், பித்அத்தான அனாச்சாரங்களையும் எதிர்த்து சமுதாய ரீதியாக, குடும்ப ரீதியாக, வட்டார ரீதியாக பிரச்சினைகளை எதிர் கொள்கின்ற மக்களைப் பார்த்து ”இவர்கள் சமுதாயத் துரோகிகள். சமுதாய ஒற்றுமையை சீர் குலைத்தவர்கள், பிரிவினைவாதிகள், சின்னஞ் சிறிய உப்புச் சப்பில்லாத விஷயங்களுக் கெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். முஸ்­லிம்களைக் காஃபிர்கள் என்று கூறிவிட்டார்கள்” என்றெல்லாம் விமர்சனங்களைத் துவக்கியுள்ளனர்.
 
நாம் தர்ஹா வழிபாட்டை எதிர்ப்பதும். மவ்லூதுகளை எதிர்ப்பதும். தாயத்து, தகடுகளை எதிôப்பதும்  வரதட்சனைக்கு எதிராக களமிறங்குவதும் இவர்களுக்குச் சின்னஞ் சிறிய விஷயமாகவும், சமுதாயப் பிரிவினைகளாகவும் தெரிகிறது. மறுமையை மறந்து இவ்வுலக வாழ்வை மட்டும் சிந்திக்கக் கூடிய இவர்கள் ”இதனை எதிர்ப்பதால் சமுதாயத்திற்கு என்ன இலாபம்?” என்று கேட்கின்றனர்.
 
உண்மையில் இவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் நாம் இந்த இணை வைப்புக்காரியங்களை எடுத்துரைக்கும் போது நிச்சயம் பெரும்பான்மையான மக்கள் அதனை எதிர்க்கத் தான் செய்வார்கள். இதைத் தான் அனைத்து நபிமார்களின் வாழ்வும் நமக்கு உணர்த்துகிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவின் மூலம் வளரத் துடிக்கின்ற இவர்கள் அதற்கு இடையூறாக நாமும் நம்முடைய பிரச்சாரமும் இருப்பதினால் தான் இவ்வாறு கூறத் துவங்கியுள்ளனர்.
 
சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங்கினாலும், எவ்வளவு பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத் வாதிகள் உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த சத்தியப் பிரச்சாரத்திற்காகத் தான் அல்லாஹ் அனைத்து நபிமார்களையும் அனுப்பியுள்ளான்.
 
"அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!" என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம் (அல்குர்ஆன் 16:36)

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். ”என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார் (அல் குர்ஆன் 7:59)

ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். ”என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று அவர் கேட்டார். (அல்குர்ஆன் 7:65)

ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸா­ஹை அனுப்பி வைத்தோம். ”என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று அவர் கூறினார் (அல்குர்ஆன் 7:73)

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். ”என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 7:85)

இவ்வுலக வாழ்வு என்பது அற்பமானதாகும். மரணத்திற்குப் பிறகு நாம் சந்திக்கவிருக்கின்ற மறுமை வாழ்வு தான் நிரந்தரமானதாகும். மறுமையில் நம்மை காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவக் க­மா தான். இன்றைய சமுதாயமோ செல்வாக்கோ படை பலமோ அங்கு நமக்குப் பயனளிக்காது. பின் வரக்கூடிய ஹதீஸ்களி­ருந்து இந்தத் தவ்ஹீதின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்தி­ருந்து ஒரு மனினை தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதி­ருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.

பிறகு அல்லாஹ் அவனிடம் இதி­ருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய  என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். ”என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையி­ருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் ”என் இரடசகனே ஏதுமில்லை” என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் ”அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் க­லிமா இருக்கும்.

நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். ”என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)” என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் ”நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்” என்று கூறுவான். அந்த பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும்.  அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும்.  அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.  அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ர­லி) நூல்: திர்மிதி (2563)

 
மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ”ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பை வழங்குகின்றேன்” என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூதர்(ரலி)  நூல்:  அஹ்மத் 20349

 
இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்கு தங்கத்தைத் கொடுத்தாலும் நரக வேதனையி­ருந்து தப்பிக்க முடியாது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸி­ருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். ”உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையி­ருந்து தப்பிப்பதற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ”ஆம்” என்று கூறுவான். ”இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணைகற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் நீ அதனைச் செய்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்)” என்று அவனுக்கு கூறப்படும். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: புகாரி 6538
 
நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்கு செய்கின்ற சேவைகளிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.
இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள்.
 
ஏனென்றால் இதனை எடுத்துரைக்கும் போது அவனுக்குப் பல விதமான சோதனைகள் பல விதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனைகள் வரவில்லை யென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள். இதைத் தான் நாம் முத­ல் குறிப்பிட்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
 
ஒரு ஏகத்துவ வாதி இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் சோதனைகளைச் சந்தித்து தான் தீரவேண்டும். நமக்கு நிரந்தர வெற்றி மறுமையில் தான் இருக்கிறது. எனவே இப்படிப் பட்ட உண்மையை உணர்ந்து உண்மையான சத்தியக் கொள்கையைப் பின்பற்றி அதனை எடுத்துரைத்து வாழக் கூடியவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.

நன்றி www.tntjcovai.com

12 July 2011

இஸ்லாத்தை பற்றி பிறமத அறிஞர்கள்!

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூறுகிறார்:

"நான் இஸ்லாத்தை மிக உயர்ந்த நிலையில் மதிக்கிறேன். ஏனெனில் இஸ்லாத்தில் வியக்கதக்க ஆற்றல்கள் இருக்கின்றன. கால மாற்றங்களை தன்னுள் இணைத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ள, மேலும் ஒவ்வொரு யுகத்தின் மக்களையும் ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ள ஒரே மார்க்கம் இது ஒன்றுதான் என எனக்குத்தோன்றுகிறது. நான் இந்த அதிசய மனிதர் பற்றி படித்திருக்கிறேன் இவர் கிருஸ்துவுக்கு விரோதமானவரல்லர் என்பதே எனது கருத்து. முஹம்மதை மனிதகுல மீட்பாளர் என்றே கண்டிப்பாக அழைக்க வேண்டும். அவரைப்போன்ற மனிதர்கள் நவீன உலகின் சர்வாதிகாரியாக அமருவாரேயானால் இன்று தேவைப்படும் அமைதி மற்றும் மகிழ்வை அளித்திடும் வகையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவார். இன்றைய ஐரோப்பா இதனை ஒப்புக்கொள்ள துவங்கியிருப்பதை போன்றே நாளைய ஐரோப்பாவும் முகம்மதின் மார்கத்தை ஏற்றுக்கொள்ளும் என முன்னறிவிப்புச் செய்கிறேன்."

Ref : Sir George Bernard Shaw, THE GENUINE ISLAM, Vol. 1, No. 81936.

17 May 2011

பிரார்த்தனை!

படைத்த இரட்சகனை படைப்பினங்கள் நெருங்குவதற்குண்டான ஒரு வழிமுறை!தன் தேவைகளை தன்னைப் படைத்த ஏக இறைவனிடமே படைப்பினங்கள் கேட்டு பெறும் கண்ணியமிக்க வாழ்வியல் முறை!

தவறுகளிலும் பாவங்களிலும் தடுமாறி விழும் மனித இனம் தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள இறைவனால் அருளப்பட்டிருக்கும் இலகுவான வணக்க முறையே பிரார்த்தனை என்பது. பிரார்த்தனை என்றதும் மனம் போன போக்கில் மன்றாடுவதும் புலம்புவதுமல்ல: அதற்கென்று கண்ணியமிக்க வழி முறையையும் வார்த்தைகளையும் அல்லாஹ்வின் மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது.


மனிதர்களின் எண்ணங்களையும் நோக்கங்களையும் மார்க்கம் முறைப்படுத்துகிறது. சொற்ப பலா பலன்களுக்கு மனிதர்கள் தங்கள் வாழ்வை சொதப்பி விடாமல் நிரந்தர நன்மைகளுக்கு மனிதனை சிந்தனை ரீதியாக, உளரீதியாக சித்தப்பட செய்கிறது.

படைப்பினங்களால் கேட்கப்படுபவனும் அவைகளுக்கு கொடுப்பவனும் எவ்வித சுயதேவைகளற்றவனாகவும் சர்வ வல்லமை பெற்றவனாகவும் எதிர்கால ஞானம் நிறைந்தவனாகவும் இருக்க வேண்டுமென இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
அத்தகைய வல்லமையும் ஆற்றலும் தன் ஒருவனுக்கு மட்டுமே இருப்பதை அல்லாஹ் உணர்த்துகிறான். மரித்து போனபின் பிண்டங்களுக்கும், கல்லுக்கும் மண்ணுக்கும் தன்னைப் போன்றே தேவைகள் இருக்கக் கூடிய சக மனிதனுக்கும் பிறர் கேட்பதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் இல்லை. அவைகளுக்குக் கேட்கும் திறனுமில்லை. அவைகளிடம் கேட்பது கொடும் பாவமும் நஷ்டமுமாகும் என மார்க்கம் எச்சரிக்கிறது.


அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டுமெனமும் தன்னிடம் மட்டுமே கேட்பதை அல்லாஹ் விரும்புவதாகவும் ஆகவே துஆ ஒரு வணக்கமாகும் என்பதையும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

மனிதனின் தேவைகள் மறுமையை அடிப்படையாகக் கொண்டதாகவும் அதற்கான அனுகூலங்கள் இம்மையில் நிறைந்ததாக இருக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு இறைமார்க்கம் கற்றுத் தருகிறது.   நோக்கங்கள் உயர்வானதாக வழிமுறைகள் தூய்மையானதாக இருந்திட வல்லோனின் மார்க்கம் வலியுறுத்துகிறது. அப்போதுதான் மனக்குழப்பங்களும் மனித தொல்லைகளும் மறுமையை நோக்கிய பயணத்திற்கு இடந்தராது.இதயம் தெளிவாகும். எல்லாப்பிரச்னைகளும் லேசாகும். இஹ்லாஸ் என்ற தூய்மையான பந்தம் இறைபக்தியில் ஏற்பட்டு வலுவாகும்.   அதுவே இன்ஷாஅல்லாஹ் இம்மை மறுமை வெற்றி களுக்கு வழிகோலும். அதற்கான முதல் ஆதாரங்களாக மகத்தான இரட்சகன் அல்லாஹ் அருளிய திருக்குர்ஆனில் இருந்து பிரார்த்தனைகளை சமுதாயத்தின் கவனத்துக்குக்  தருகிறோம்.

إيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ  وَلَا الضَّالِّينَ

"(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல." (அல் குர்ஆன்: 1:5-7)

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். எங்களை மன்னிப்பாயாக! நீயே நிச்சயமாக மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல் குர்ஆன்: 2:127-128).

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
 
"ரப்பனா! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல் குர்ஆன்: 2:201)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِين

"எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாய! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாக!" (அல் குர்ஆன்: 2:250)

سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

"எங்கள் இறைவனே! (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிபட்டோம்.எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்.மீளுவதும் உன்னிடமே தான்" (அல் குர்ஆன்: 2:295)

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் எங்கள் சக்திக்காப்பாற்ப்பட்ட சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது எங்களுக்கு உதவி செய்வாயாக!" (அல் குர்ஆன்: 2:286)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே!இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருள் அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (அல் குர்ஆன்: 3:8)

 رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கைகொண்டோம்; எங்களுக்கர்க எங்கள பாவங்களை மன்னித்தருள்செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!" (அல் குர்ஆன்: 3:16)

اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُبِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

"அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப்பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்." (அல் குர்ஆன்: 3:26)

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

"இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் விமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." (அல் குர்ஆன்: 3:38)

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (அல் குர்ஆன்: 3:53)

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக." (அல் குர்ஆன்: 3:147)

رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ  رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!’. ‘எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!’. ‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக் இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

"எங்கள் இறைவனே!இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குதஷ தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல." (அல் குர்ஆன்: 3:191-194)

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
 
"எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" (அல் குர்ஆன்: 5:83)

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால்,நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்." (அல் குர்ஆன்: 7:23)

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

"எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்." (அல் குர்ஆன்: 7:89)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக் முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி) எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (அல் குர்ஆன்: 7:126)

لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்." (அல் குர்ஆன்: 7:149)

وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ

"இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்." (அல் குர்ஆன்: 7:156)

حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ  وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி." (அல் குர்ஆன்: 9:129)

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

"நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களைஆளாக்கிவிடாதே!" (அல் குர்ஆன்: 10:85)

11 May 2011

இறைவனுக்கு உள்ள இலக்கணம்!

மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.

இஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்புகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமை தான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத் தான் செய்கின்றோம். அதே நேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு உண்மை முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார்? கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார்? போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுரித்துக் காட்டிவிடுவர்.


இஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது. இந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புரியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெறும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!.  அது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குரிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.

அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம்:

01. (நபியே!) நீர் கூறுவீராக: அவன் – "அல்லாஹ் ஒருவனே!"
02. அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).
03. அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை.
04. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.

இந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது
மேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.

01. "(நபியே!) நீர் கூறுவீராக, அவன் – 'அல்லாஹ்' ஒருவனே!"

ஒரு விஷயத்தை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மதத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் ‘அல்லாஹ்’ என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் ‘அல்லாஹ்’ என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர ‘அல்லாஹ்’ முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாள ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.

02. "அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)."

இறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது. மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோர முடியும்! பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும்.

இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீனத்தை அப்புறப்படுத்துகிறான்.

இறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோரிக்கைகளை யாரிடம் முறையிடுவது? எல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக!

03. "அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை."

இறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார்? அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா? என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன்று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெரிந்து கொள்வார்கள்.

கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.

அடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன? முதலாவது கடவுள் மனித வடிவில் வந்து தான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குரிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும்! அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது?! கவணத்திற் கொள்க!

அடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும்.

இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.

04. "மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை."

 இந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது. இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டிருக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும்.

இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்? புரியாத புதிர்!!

எனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பன்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு ஒரு உறை கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.

படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும். இதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்.