Showing posts with label Quran and Science. Show all posts
Showing posts with label Quran and Science. Show all posts

16 March 2011

அனைத்திலும் ஜோடி!

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 13:3)


“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்). (அல்குர்ஆன் 20:53)

பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். (அல்குர்ஆன் 36:36)

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். (அல்குர்ஆன் 51:49)

திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.
தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

08 March 2011

இரு கடல்களுக்கிடையே தடுப்பு!

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (அல் குர்ஆன் 25:53)


இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையேஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளைஉண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும்யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (அல் குர்ஆன் 27:61)

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள்சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம்போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும்அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம்செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள்இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல் குர்ஆன் 35:12)

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவைமீறமாட்டா. (அல் குர்ஆன்55:19-20)

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில்அவ்விரண்டுக்கும் இடையே  ஒரு பலமான தடையையும், தடுப்பையும்ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள்சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன்எப்படி தெரியும்?
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும்சான்றாக இருக்கிறது.


Modern Science and the Holy Quran.
First of all, here are the Ayaat of the Holy Quran, in Surah Rahman,

Surah 55:19- 28
[19] He has let free the two bodies of flowing water (salt and fresh), meeting together:
[20] Between them is a barrier which they do not transgress:
[21] Then which of the favors of your lord will ye deny?
[22] Out of them come pearls and coral:
[23] Then which of the favors of your lord will ye deny?
[24] Also, his are the ships displayed upon the sea, like banners.
[25] Then which of the favors of your lord will ye deny?
[26] All that live on it will perish.
[27] And there will endure for ever the person of your lord, the lord of glory and honor
[28] Then which of the favors of your lord will ye deny?

Now, what Modern science has discovered is, that where the 2 seas meet,  there is a barrier.  This barrier divides the 2 seas so that they do not mix.   Each sea has its own salinity, density and temperature. (Principles of Oceanography, Davis, pp. 92-93.) 

There is a slanted unseen water barrier between the seas through which water from one sea passes to the other. But when the water from one sea enters the other sea, it loses its distinctive characteristic and becomes homogenized with the other water. In a way this barrier serves as a transitional homogenizing area for the two waters.

This scientific phenonmenon mentioned in the QUR’AN was also confirmed by Dr. William Hay who is a well-known marine scientist and Professor of Geological Sciences at the University of Colorado, U.S.A.
The barrier has a different salinity and density from both the seas.

Modern Science has discovered that in estuaries, where fresh(sweet) and salt water meet, the situation is somewhat different from that found in places where two seas meet. It has been discovered that what distinguishes fresh water from salt water in estuarie is a "pycnocline zone with a marked density discontinuity separating the two layers." {Oceanography, Gross, p.242. Also see Introductory Oceanography, Thurman, pp. 300-301 ; Oceanography, Gross, p. 244 and Introductory Oceanography, Thurman, pp.300-301}.

One place on earth where this phenomenon is exhibited is Cape Agulhas, South Africa, where the Atlantic Ocean meets the Indian Ocean.  It’s just amazing…

Another place is Gibraltar, where the Atlantic Ocean meets the Mediterranean Sea.  This phenomenon also occurs in several other places, including Egypt, where the river Nile flows into the Medierranean Sea.

It’s amazing how, this was recently discovered by Oceanographers (if that’s what you call them) and was stated in the Quran, 1400 years ago.  And Allah knows best.

01 March 2011

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

"நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்." [அல்குர்ஆன் 16:66]


உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாகிறது.

அதாவது அரைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது. 

27 February 2011

சூரியனும் கோள்களும்!

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். (அல்குர்ஆன் 13:2)


“நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். (அல்குர்ஆன் 31:29)

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. (அல்குர்ஆன் 35:13)

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் 36:38-40)

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் 39:5)

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது; அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று. 


தொகுப்பு: முகவை ஷேக்

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்!

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி, முஸ்லிம்.


அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)

பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.
எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:
ஆழ் கடலில் அலை
இரு கடல்களுக்கிடையே தடுப்பு
நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை
திருப்பித் தரும் வானம்
பெருவெடிப்புக் கொள்கை
முகடாக வானம்
வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி
விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்
வானத்திலும் பயணம் செய்ய வழிகள்
முளைகளாக மலைகள்
பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை
பூமி உருண்டை
பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்
ஓரங்களில் குறைந்து வரும் பூமி
மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்
புவி ஈர்ப்பு சக்தி
விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்
கலப்பு விந்து
கர்ப்ப அறையின் தனித்தன்மை
வேதனையை உணரும் நரம்புகள்
தேன் உற்பத்தி
இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.

தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்
அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்!  (அல்குர்ஆன் 55:7-9)

மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.

அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.
வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்!  (அல்குர்ஆன் 21:32)

பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.

இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.
இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.

நன்றி  www.tntj.net

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்!


மரத்தி­ருந்து பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது? என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு! சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை உலகத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டனின் காலம் கி.பி. 1642-1727.
 
ஆனால் சிந்தனைப் புரட்சியின் இந்த சிகரத்தை மனித அறிவு எட்டி விடாத அந்தக் காலத்திலேயே இந்தப் பேருண்மையை அல்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்கள் வாய் வழியாகப் போட்டு உடைக்கின்றது. அதன் மூலம் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதையும், அவர் கொண்டு வந்தது அல்லாஹ்வின் வேதம் தான் என்பதையும் நிரூபித்து நிற்கின்றது. உலகத்தையே ஈர்க்கும் வண்ணம் புவி ஈர்ப்பு சக்தியைப் பற்றி பறை சாற்றிக் கொண்டு நிற்கும் அந்த வசனங்கள் எவை?
 
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 13:2)
 
நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானி­ருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 31:10)
 
இந்த வசனங்கள் மூலம் புவி ஈர்ப்பு சக்தியை எடுத்துக் கூறி ”நான் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கின்றேன்; என்னுடைய கருத்தை யாரேனும் மறுக்க இயலுமா?” என்று குர்ஆன் கம்பீரத்துடன் கர்ஜித்து நிற்கின்றது.
 
பூமிக்கும், வானத்திற்கும் இடையே பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன! இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு அவற்றை குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஓர் ஈர்ப்பு விசை எல்லாப் பகுதிகளிலும் பரவியிருப்பது தான் காரணம்.
 
இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எந்தவிதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.
எனவே மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.
 
வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் ”பார்க்கின்ற தூண்களின்றி” என்ற வார்த்தையை தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் ”பார்க்கின்ற தூண்களின்றி” என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.
 
திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்குச் சான்றாக இது அமைந்துள்ளது.
 
புலனுக்குத் தெரியாத புவி ஈர்ப்பு விசை நம்முடைய கண்களுக்குத் தெரியாத வகையில் புவி ஈர்ப்பு விசையொன்று நம்மைச் சுற்றி நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. புவி ஈர்ப்பு விசை நம்மை வாழ வைக்கின்றதா? என்ன கதை விடுகின்றீர்களா? என்று கேட்கலாம். நிச்சயமாக இது கதையல்ல! சத்தியமான அல்குர்ஆனின் அறிவிப்பும் அறிவிய­ன் நிரூபணமும் ஆகும்.
அல்லாஹ் சொல்வது போல் புவி ஈர்ப்பு சக்தி நம்முடைய பார்வைப் புலன்களுக்குத் தெரியாததால் நமக்கும் அதற்கும் உண்டான தொடர்பு நமக்குத் தெரிவதில்லை. நமக்கும் இந்த புவி ஈர்ப்பு விசைக்கும் உள்ள தொடர்பு சாதாரண தொடர்பல்ல! நம்முடைய நாசித் துவாரத்தில் ஓடி வெளியாகிக் கொண்டிருக்கும் உயிர் மூச்சுத் தொடர்பாகும். புவி ஈர்ப்பு சக்தி என்ற ஒன்றில்லையாயின் நாம் சுவாசிக்கும் காற்று நம்மை விட்டுப் பறந்து போய் விடும். அவ்வாறு பறந்து போய் விடாதவாறு காத்து நிற்கும் கவசம் தான் புவி ஈர்ப்பு விசை!
 
சுவாசக் காற்றை காக்கும் கவசம்
மனிதன் மட்டுமல்ல! புவியில் வாழும் நிலம் மற்றும் நீர் வாழ் அனைத்து உயிரினங்களின் சுவாசக் காற்றை புவி ஈர்ப்பு சக்தி எவ்வாறு காத்து நிற்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.
நாம் வாழும் இந்தப் புவியைச் சுற்றி வளி மண்டலம் என்ற ஒன்று அமைந்துள்ளது. வளி என்றால் காற்று என்று பொருள். உயிரினங்கள் வாழ இந்த வளி மண்டலம் இன்றியமையாத ஒன்றாகும். இந்த வளி மண்டலம் புவியின் மேற்பரப்பி­ருந்து 10,000 கி.மீ. உயரம் வரை காணப்படுகின்றது. இந்த வளி மண்டலத்தில் உள்ள காற்றின் மொத்த அளவில் 97 சதவிகிதம் புவியின் மேற்பரப்பி­ருந்து 29 கி.மீ. உயரத்திற்குள் காணப்படுகின்றது. புவியின் மேற்பரப்பி­ருந்து உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைந்து கொண்டே செல்கின்றது. புவியின் மேற்பரப்பி­ருந்து 5 கி.மீ. உயரத்திற்கு மேல் காற்றின் அடர்த்தி குறைவதால் நாம் சுவாசிப்பதற்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் தான் மலை ஏறுபவர்கள் தங்களுடன் ஆக்ஸிஜன் சி
லிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.
 
வளி மண்டலத்தில் கலந்திருக்கும் வாயுக்கள்
வளி மண்டலம் என்பது ஒரு தனிப்பட்ட வாயுவினால் அமைந்ததல்ல! அது பல வாயுக்களின் தொகுப்பு! வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான் 0.934 சதவிகிதமும், நியான் 0.0018 சதவிகிதமும், ஹீ­யம் 0.00052 சதவிகிதமும், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.
 
அல்லாஹு தஆலா இந்த வாயுக்ககளை வளி மண்டலத்தில் மேற்கண்ட விகிதாச்சாரக் கணக்கில் அமைத்து இப்புவியில் உயிர்ப் பிராணிகளையும் தாவர இனத்தையும் வாழ வைத்திருக்கின்றான். வளி மண்டலத்தில் இரண்டறக் கலந்து நிற்கும் இந்த வாயுக்களில் 78 சதவிகிதம் உள்ள நைட்ரஜனுக்கு நிறம், மணம் எதுவும் கிடையாது. நச்சுத் தன்மை கொண்டதுமல்ல! இது தீயை அணைக்கும் தன்மை கொண்டதாகும். இந்த நைட்ரஜன் உயிரின வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை மின்னல் என்ற தலைப்பில் நாம் காணவிருக்கின்றோம்.
நைட்ரஜனுக்கு அடுத்தபடியாக அதிகம் கலந்திருப்பது ஆக்ஸிஜன்! நைட்ரஜன் நெருப்பை அணைப்பதற்குத் துணை புரிகின்றது என்றால் இது அதை எரிப்பதற்குத் துணை புரிகின்றது. இதற்கும் மணம், சுவை, நிறம் கிடையாது. இது மற்ற மூலங்களுடன் கலந்து ஆக்ஸைடுகளாக மாறும் தன்மை கொண்டது. ஆக்ஸிஜன் இல்லையெனில் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ முடியாது. சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் அவசியம்!
கார்பன் டை ஆக்ஸைடு என்பது கனமான வாயுவாகும்.

அதனால் இது வளி மண்டலத்தின் கீழ்ப் பகுதியிலேயே அதிக அளவு காணப்படுகின்றது. வளி மண்டலத்தின் உயரே செல்லச் செல்ல இதன் அளவு குறைகின்றது. இது மற்ற வாயுக்களைக் காட்டிலும் வெப்பத்தை அதிகம் கிரகிக்கும் தன்மை கொண்டது.. எனவே இது வளி மண்டலத்தில் சூரிய வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகின்றது.
 
இத்தகைய பயன்பாடுகளைக் கொண்ட வாயுக்களைக் கலவையாகக் கொண்டது தான் வளி மண்டலம்! இந்த வளி மண்டலம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. இந்த ஐந்து அடுக்குகளைப் பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது நாம் இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் இந்த வளி மண்டலக் காற்று விண்வெளியில் கலைந்து, கரைந்து போகாமல் காக்கும் கவசம் எது? இந்தப் புவி ஈர்ப்பு விசை தான்.
 
பூமி வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இந்தப் புவியானது, தான் மட்டும் சுழலவில்லை; தனது ஈர்ப்பு சக்தியின் காரணமாக தன்னுடன் 10,000 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள காற்று மண்டலத்தையும் சேர்த்தே சுற்றுகின்றது. இல்லை! சுழற்றுகின்றது. இந்தப் புவி ஈர்ப்பு விசை இல்லாவிட்டால், காற்று மண்டலம் கலைந்து போய் நாம் சுவாசக் காற்று இல்லாத சுருண்டு போன கருவாடுகளாகி விடுவோம்.
 
இப்படி நமது சுவாசக் காற்றை கவசமாகக் காத்து நிற்பது புவி ஈர்ப்பு விசையே! அது மட்டுமின்றி உருண்டையான ஒரு பெரிய பந்துக்கு மேல் நாம் நிற்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பந்து உருள ஆரம்பித்தால் என்னவாகும்? நாம் கீழே விழுந்து விடுவோம். ஆனால் அதே சமயம் மணிக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் கி.மீ. வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் பூமி என்ற பந்தின் மீதுள்ள நாம் கழற்றி எறியப்படாமல் சுழன்று கொண்டிருப்பதற்குக் காரணமும் இந்தப் புவி ஈர்ப்பு விசை தான். அருவியி­ருந்து நீர் விழுந்தாலும் ஆகாயத்தி­ருந்து நீர் விழுந்தாலும் பைப்பி­ருந்து பானையில் நீர் விழுந்தாலும் அத்தனைக்கும் காரணம் புவி ஈர்ப்பு விசை தான்!

நன்றி  www.tntj.net

26 February 2011

Surah Al-Nahl (The Bee)

 தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்:

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான்.
“நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

அல்குர்ஆன் 16:68-69

And thy Lord revealed to the bee:
Make hives in the mountains and in the trees and in what they build.
Then eat of all the fruits and walk in the ways of thy Lord submissively. There comes forth from their bellies a beverage of many hues, in which there is healing for men.
Therein is surely a sign for a people who reflect.

Al Quran_16:68 & 69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.

உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள
். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனா. இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

ஓரங்களில் குறையும் பூமி!


பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
(அல்குர்ஆன்: 13:41)

See they not that We are visiting the land, curtailing it of its sides? And Allah pronounces a doom – there is no repeller of His decree. And He is Swift in calling to account. (Al-Quran_13:41)

எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
(அல்குர்ஆன்: 21:44)

Nay, We gave provision to these and their fathers, until life was prolonged to them. See they not then that We are visiting the land, curtailing it of its sides? Can they then prevail?(Al-Quran_21:44)

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.